ஈ.பி.எஸ். அரசு 2 மாதங்களில் வீட்டுக்கு அனுப்பப்படும் – ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. தினகரன்..!

311

எடப்பாடி பழனிச்சாமி அரசு இரண்டு மாதங்களில் வீட்டுக்கு அனுப்பப்படும் என ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. தினகரன் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சித்தேர்தலில் அதிகஇடங்களில் வெற்றி பெற்று அதிமுகவையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்கபோவதாக கூறினார். பேருந்து கட்டண உயர்வால் ஏழை, எளிய மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் விலை உயர்வை உடனே திரும்ப பெறவேண்டும் என்று தினகரன் வலியுறுத்தினார். தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத அரசை இரண்டு மாதங்களில் வீட்டுக்கு அனுப்புவோம் என்றும் தெரிவித்தார்.