தினகரன் அணியும் நாங்களும் ஒரு தாய் பிள்ளைகள்-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

1463

தினகரன் அணியும், தாங்களும் ஒரு தாய்பிள்ளைகள் என்றும், தோல்வி பயத்தில் அவர் பிரிந்துவிட்டதாகவும் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளர்.
சென்னையில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், இரட்டை இலை சின்னம் மக்களின் உள்ளத்தில் குடிகொண்டுள்ளதாகவும், மதுசூதனன் நிச்சயம் வெற்றி பெறுவார் எனவும் கூறினார். ஆர்.கே.நகரில் தேர்தல் ஆணையம் விதித்துள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு பிரச்சாரங்களை செய்து வருவதாக கூறிய அவர், நம்பிக்கையில்லா தீர்மாணத்தில் வெற்றி பெற்றது முதல் இரட்டை இலை சின்னம் கிடைத்தது வரை அனைத்திலும் தங்கள் அணிக்கு வெற்றி கிடைத்துள்ளது என்றார். தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தினகரன் அணியும், தாங்களும் ஒரு தாய் பிள்ளைகள் எனவும், தோல்வி பயத்தில் அவர் பிரிந்துவிட்டதாகவும் கூறினார்.