தினகரன் ஆதரவு முன்னாள் எம்.எல்.ஏக்கள்மைசூர் சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் !

307

குடகு விடுதியில் தங்கியிருக்கும் தினகரன் ஆதரவு முன்னாள் எம்.எல்.ஏக்கள், மைசூர் சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தினகரன் ஆதரவு முன்னாள் எம்.எல்.ஏக்கள் 18 பேர் தங்கியுள்ளனர். தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்களை பதவியில் இருந்து, சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்த பின்னரும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பதவி நீக்கம் செய்யும்வரை குடகுகிலேயே தங்கியிருப்போம் என்று முன்னாள் எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பதவி இழந்ததாலும், வீட்டை விட்டு பிரிந்து இருப்பதாலும் ஏற்பட்டுள்ள மன உளைச்சலை போக்க, டிடிவி.ஆதரவு முன்னாள் எம்எல்ஏ-க்கள் தலைக்காவிரி மற்றும் சுற்றுலா தலங்களுக்கும், கோயில், கோயிலாகவும் சென்று வருகின்றனர். அதன்படி நேற்று 18 பேரில் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் மைசூர் சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு சென்று, சுவாமி தரிசனம் செய்தனர். மதியம் வரை பொழுதை அங்கேயே கழித்த அவர்கள், மாலையில் தங்கள் வாகனம் மூலமாக குடகு விடுதிக்கு திரும்பியுள்ளனர்.