அரசை கலைக்க நினைத்த தினகரனுக்கு கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும் : கே.பி. முனுசாமி.

184

அதிமுக ஆட்சியை கவிழ்க்க துடிக்கும் தினகரனுக்கு ஆதரவாக பேசும் தம்பிதுரைக்கு முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என விளக்கம் அளித்தார். முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இருவரும் சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்த கே.பி.முனுசாமி, அதிமுக ஆட்சியை கலைக்க சிலர் சதி திட்டம் தீட்டுவதாக குற்றம் சாட்டினார். தினகரன் தங்களது அணியில் இணைய வேண்டும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை அழைத்து விடுத்திருப்பது வேதனை அளிப்பதாக குறிப்பிட்ட முனுசாமி, அரசை கலைக்க வேண்டும் என கூறிய தினகரனுக்கு தம்பிதுரை கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.