திமுகவுடன் எந்த கூட்டணியும் கிடையாது-தினகரன்!

274

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி ஒருவார காலத்திற்குள் வீட்டுக்கு அனுப்பப்படும் என்று, தினகரன் தெரிவித்துள்ளார். திமுகவுடன் எந்த கூட்டணியும் கிடையாது என்று கூறிய அவர், ஆட்சியை தக்கவைக்க முதலமைச்சர் குறுக்கு வழியில் முயற்சிப்பதாக கண்டனம் தெரிவித்தார்.
சென்னை அடையாறில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், துரோக ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்து விட்டதாக குறிப்பிட்டார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி ஒரு வாரத்தில் வீட்டுக்கு அனுப்பப்படும் என்று தெரிவித்த தினகரன், தனது ஆதரவு எம்எல்ஏக்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு இருப்பதாக குற்றம்சாட்டினார்.
திமுக தங்கள் எதிரி என்று விளக்கம் அளித்த தினகரன், அந்த கட்சியோடு எந்த கூட்டணியும் கிடையாது என்று உறுதிபடக் கூறினார். நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்தி குறுக்கு வழியில் ஆட்சியை தக்க வைக்க முதலமைச்சர் முயற்சிப்பதாக அவர் சாடினார்.