கேரள உயர் நீதிமன்றத்தில் நடிகர் திலீப்பின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.

314

கேரள உயர் நீதிமன்றத்தில் நடிகர் திலீப்பின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.
கேரளாவில் பிரபல நடிகை கடத்தப்பட்ட வழக்கில் சதித்திட்டம் தீட்டியதாக மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். அவர் கடந்த ஒரு மாதமாக ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திலீப்பின் ஜாமீன் மனுவை அங்கமாலி மாஜிஸ்திரேட் நீதிமன்றம், கேரள உயர் நீதிமன்றம் ஆகியவை ஏற்கனவே தள்ளுபடி செய்துள்ளன. இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மீண்டும் ஜாமீன் கேட்டு திலீப் கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். நேற்று நடைபெற்ற இந்த மனு மீதான விசாரணையில், திலீப்புக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி என அவரது தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். ஜாமீனில் விட்டால் இந்த வழக்கின் முக்கியமான சாட்சிகளை திலீப் கலைத்து விடுவார் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் ஏற்றுக்கொண்ட கேரள உயர்நீதிமன்றம், திலீப்பின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்றும் தொடரும் என தெரிவித்துள்ளது.