சிறையில் சொகுசு வாழ்க்கை வாழும் நடிகர் திலீப் | சிறையில் இருந்து விடுதலையான நபர் தகவல்..!

401

நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப், சசிகலா போலவே, சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக கேரள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில், கடந்த மாதம் 11ஆம் தேதி கைது செய்யப்பட்டு, கேரள மாநிலம் ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் திலீப்புக்கு வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சிறையில் திலீப் ராஜ வாழ்க்கை வாழ்வதாக அவருக்கு பக்கத்து அறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ஒருவர் மலையாள மீடியாவுக்கு பேட்டி அளித்துள்ளார். சிறை அதிகாரிகள் அறையில் மட்டுமே இருந்து வரும் திலீப், அதிகாரிகளுக்கு வரும் உணவை உண்பதாகவும், இரவில் மட்டும் உறங்குவதற்கு சிறைக்கு செல்வதாகவும் அந்த நபர் கூறியுள்ளார். மேலும், திலீப்பின் உடைகளை துவக்க, பாத்திரம் கழுவ, கழிவறையை சுத்தம் செய்ய கைதி ஒருவரை அவருக்கு உதவியாக அதிகாரிகள் நியமித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.