நடிகர் திலீப்குமாரின் உடல் நிலையில் பின்னடைவு..!

453

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப்குமாரின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால், மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

95 வயதான அவர், நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் திலீப்குமார் ஒரு வாரகாலத்திற்கு சிகிச்சை பெற வேண்டியிருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். திலீப்குமாருக்காக பிரார்த்திக்கும்படி அவருடைய குடும்பத்தினர் டிவிட்டரில் ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.