பிரபல மலையாள நடிகர் திலீப் மற்றும் நடிகை காவ்யா மாதவனின் திருமணம் கொச்சியில் எளிமையாக நடைபெற்றது.

513

பிரபல மலையாள நடிகர் திலீப் மற்றும் நடிகை காவ்யா மாதவனின் திருமணம் கொச்சியில் எளிமையாக நடைபெற்றது.
தமிழில் விஜயகாந்த் உடன் ராஜ்ஜியம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள மலையாள நடிகர் திலிப்பிற்கும், நடிகை காவ்யா மாதவனுக்கும், கொச்சியில் இன்று திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மலையாள திரையுலகைச் சேர்ந்த மம்முட்டி, மோகன்லால், சிப்பி, ஜோமோல், ஜெயராம், நடிகை மேனகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடிகர் திலிப்பிற்கு ஏற்கெனவே மஞ்சுவாரியருடன் திருமணம் நடைபெற்று, 2015 ஆம் ஆண்டு, கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர். இதேபோல காவ்யா மாதவனும், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து ஆனவர். திலிப்பிற்கு மீனாட்சி என்ற 16வயது மகள் உள்ள நிலையில், அவரது முன்னிலையில் திலிப் – காவ்யா மாதவன் திருமணம் நடைபெற்றது. திலிப்பின் மகள் மீனாட்சியின் வற்புறுத்தலே இந்த திருமண நடைபெற்றதற்கு காரணம் என மலையாள திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.