பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கப்பட்டிருந்த அதிர்ச்சி தகவல்….

356

பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கப்பட்டிருந்த அதிர்ச்சி தகவல், டிஐஜி ரூபா ஆய்வில் அம்பலமாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு சிறையின், சிறைத் துறை டிஐஜியாக இருந்த ரூபா கடந்த வாரம் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது சசிகலா அறையில், தனி சமையலறை உள்ளிட்ட வசதிகள் இருப்பது தெரியவந்தது. மேலும், சொகுசு வசதிகளுக்காக சசிகலா தரப்பில் இருந்து சிறை துறை அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் வரை லஞ்சம் கொடுக்கப்பட்ட தகவலும் வெளியானது. இந்தநிலையில், சிறையில் சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தது தொடர்பான காட்சிகள் வெளியாகி உள்ளன. பார்வையாளரை சந்திக்க ஒரு அறையும், டிவி பார்க்க, யோகாசனம் செய்ய தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிறையில் சசிகலா குக்கர் வைத்து சமைக்க வசதி செய்யப்பட்டு இருந்ததும் அம்பலமாகியுள்ளது.