9ம் வகுப்பு முதல் டிஜிட்டல் போர்ட் மூலம் பாடம் எடுப்பதற்கான திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மருத்துவம் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க இந்திய மருத்துவ கவுன்சில் மூலம் போதுமான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது என்றார். 9ம் வகுப்பு முதல் டிஜிட்டல் போர்ட் மூலம் பாடம் எடுப்பதற்கான திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறிய பிரகாஷ் ஜவடேகர், இத்திட்டம் மாணவர்கள் நவீன முறையில் பாடம் கற்க பயனுள்ளதாக இருக்கும் என கூறினார்.