சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக ஸ்டம்பிங்குகள் சங்ககராவின் உலக சாதனையை சமன் செய்த தோனி!

702

சர்வதேச ஒருநாள் போட்டிகள் அதிக ஸ்டம்பிங்குகளை செய்த இலங்கை முன்னாள் கேப்டன் சங்ககராவின் உலக சாதனையை இந்திய முன்னாள் கேப்டன் தோனி சமன் செய்துள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது போட்டி பல்லேகெல்லேவில் நடைபெற்றது. இதில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி இலங்கை பேட்ஸ்மேன் குனத்திலகாவை ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழக்க செய்தார். இதன் மூலம் தோனி ஒருநாள் போட்டிகளில் 99 ஸ்டம்பிங்குகளை செய்துள்ளார். இதுவரை சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இலங்கை முன்னாள் கேப்டன் சங்ககரா 99 ஸ்டம்பிங்குகளை செய்து அதிக ஸ்டம்பிங்குகளை செய்த விக்கெட் கீப்பர்களின் பட்டியலின் முதலிடத்தில் இருந்தார். இந்த நிலையில், சங்ககராவின் சாதனையை தோனி சமன் செய்துள்ளார்.