பிடித்த வீரர் டோனிதான் ! மகிழ்ச்சியுடன் வாட்சன் மகன் வில்லியம் பேட்டி

287

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமக்கு பிடித்தமான கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனி என வாட்சன் மகன் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையே ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் அதிரடி ஆட்டம் காட்டிய ஷேன் வாட்சன், போட்டி முடிந்ததும் மைதானத்தில் உற்சாகமாக வலம் வந்தார். இதனையடுத்து, தமது மகன் வில்லியமிடம் அவர் பேட்டி எடுத்தார். அப்போது, சென்னை அணியில் உனக்கு யாரை பிடிக்கும் என்று கேட்டதற்கு, தந்தையை நோக்கி அந்த சிறுவன் கை நீட்டினான். தம்மை தவிர வேறு யாரை பிடிக்கும் என்று கேட்டதற்கு, மகேந்திர சிங் டோனிதான் பிடிக்கும் என்றும், அவர் எப்போதும் நன்றாக விளையாடுகிறார் எனவும் வாட்சன் மகன் மகிழ்ச்சியுடன் கூறினார்.