இந்தியா-பாகிஸ்தான் தொடர் பற்றி அரசு தான் முடிவு செய்ய வேண்டும்- தோனி!

1092

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் தொடர் குறித்து அரசாங்கம் தான் முடிவு செய்ய வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா பகுதியில் ராணுவம் சார்பில் நடத்தப்பட்ட உள்ளூர் விளையாட்டு போட்டியை அவர் பார்வையிட்டார். ராணுவ உடை அணிந்து வந்த அவர், ரசிகர், ரசிகைகளுக்கு ஆட்டோகிராப் வழங்கினார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தோனி, இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் குறித்து அரசாங்கம் தான் முடிவு செய்ய வேண்டும் என கூறினார். இருநாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் வெறும் விளையாட்டு மட்டுமல்ல என குறிப்பிட்ட அவர், அதைவிட முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் தெரிவித்தார்.