இந்துக் கடவுளை அவமதித்ததாக தோனி மீது தொடரப்பட்ட வழக்கில் அவர் மீதான குற்றவியல் நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

287

இந்துக் கடவுளை அவமதித்ததாக தோனி மீது தொடரப்பட்ட வழக்கில் அவர் மீதான குற்றவியல் நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான ஆங்கில மாத இதழ் ஒன்றில் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியை விஷ்ணு போல சித்தரித்து அட்டைப்படம் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதில், தோனிக்கு பல கைகள் இருப்பது போலவும் அவற்றில் ஷூ உள்ளிட்ட பல்வேறு வியாபாரப் பொருளை வைத்திருப்பது போலவும் இருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதனை எதிர்த்து விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஆந்திரா அனந்தபூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஜாமீனில் வெளிவரமுடியாத பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இதனை தள்ளுபடி செய்யக்கோரி தோனி சார்பில், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தோனிமீதான வழக்கில் சட்டத்தின் விதிகள் சரியாக பின்பற்றப்படவில்லை எனக்கூறி, அவர்மீதான குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்தது.