இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது 37வது பிறந்தநாளை சக வீரர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

கிரிக்கெட் விளையாட்டில் பல்வேறு சாதனைகள் படைத்துள்ள மகேந்திர சிங் தோனி 37வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். தனது மனைவி மற்றும் சக கிரிக்கெட் வீரர்களுடன் தோனி கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். இந்த காட்சிகள் இணையத்தில் பரவி கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு பிசிசிஐ, ஐசிசி சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீவேந்திர சேவாக், சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களும் தோனியை வாழ்த்தியுள்ளனர். மேலும் இசையமைப்பாளர் அனிருத் , நடிகர் மகேஷ் பாபு, நடிகை பிரியா வாரியர் , கிரிக்கெட் வர்ணனையாளர் சுந்தர் பிள்ளை ஆகியோரும் வாழ்த்து தெரிவித்தனர். நாடு முழுவதும் உள்ள தோனியின் ரசிகர்கள் இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.