2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட முடியும் என்று தோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

229

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட முடியும் என்று தோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, 2014-ம் ஆண்டு இறுதியில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் தோனி விலகியதையடுத்து, இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டு வருகிறார். ஒரு நாள் போட்டி மற்றும் சர்வதேச 20 ஓவர் போட்டியில் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக விளையாடிவரும் தோனி, 2019-ம் ஆண்டு உலக கோப்பை வரை விளையாடுவாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதற்கு விளக்கமளிக்கும் விதமாக டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்டில் விளையாட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.