நிறைய சிக்சர்களை பறக்கவிடுவேன், மகேந்திரசிங் டோனி அதிரடி !

233

சூழ்நிலை சாதகமாக அமைந்தால் நிறைய சிக்சர்களை பறக்கவிடுவேன் என மகேந்திர சிங் டோனி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய டோனி, இனி விராட் கோலியின் தலைமையில் விளையாட உள்ளார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் அணிக்கு திரும்பியுள்ள யுவராஜ்சிங், டோனியிடம் பேட்டி எடுத்து தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கேப்டனாக கடந்து வந்த பாதை குறித்து யுவராஜ்சிங் கேட்டதற்கு, கேப்டன் பொறுப்பு அவ்வளவு எளிதானது அல்ல என்றும், ஆனால் இந்த பயணம் மிக சிறப்பாக இருந்தது என்றும் டோனி கூறியுள்ளார். தற்போது நீங்கள் கேப்டனாக இல்லை, உங்களிடம் இருந்து நிறைய சிக்சர்களை எதிர்பார்க்கலாமா என யுவராஜ்சிங் கேட்டதற்கு, சரியான தருணத்தில், சாதகமான சூழ்நிலை அமைந்தால் நிறைய சிக்சர்களை பறக்கவிடுவேன் என மகேந்திர சிங் டோனி தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.