தீரன் சின்னமலையின் 212 வது நினைவு தினம் முதலமைச்சர், அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை

268

விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளையொட்டி அவருடைய சிலைக்கு முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 212 வது நினைவுநாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவியும், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் ஜெயக்குமார், ராஜேந்திரபாலாஜி, துரைக்கண்ணு, பென்ஜமின் உள்ளிட்டோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.