தீனதயாளன் வீட்டில் கைப்பற்றப்பட்ட மேலும் 5 சிலைகள் திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் உள்ள அரசு சிலை காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டன

165

திருவொற்றியூர் : பழங்கால சிலைகள் மற்றும் ஓவியங்களை கடத்தி வைத்திருந்த வழக்கில், தொழிலதிபர் தீனதயாளன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட 51 உலோக சிலைகள், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் உள்ள திருமேனி அரசு காப்பகத்தில் ஒப்படைக்க எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து மீண்டும் ஐந்து 5 சிலைகள் எழும்பூர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. சிலைகளை சரிபார்த்த நீதிபதி பெருமாள், அவற்றையும் திருவொற்றியூர் சிலை காப்பகத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் ஐந்து சிலைகளும் கோவில் உதவி ஆணையரிடம் ஒப்படைக்கப்பட்டன