தயாளு அம்மாளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்திப்பு..!

258

அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தயாளு அம்மாளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்தார்.

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் மனைவியான தயாளு அம்மாளுக்கு நேற்று இரவு தீடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தயாளு அம்மாளுக்கு முழு உடல் பரிசோதனை செய்தனர்.

இந்நிலையில் இன்று காலை திமுக தலைவரும், அவரது மகனுமான மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் வருகை புரிந்தார். அங்கு தயாளு அம்மாளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும், ஆரோக்கியம் குறித்தும் மருத்துவமனை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.