ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருப்பதாக, தருண் அய்யாசாமியின் தாயார் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்தம ராவுத்தம்பாளையத்தை சேர்ந்தவர் தருண் அய்யாசாமி. 21 வயதான இவர், இந்தோனேசியாவில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு, 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இது தொடர்பாக தருண் அய்யாசாமியின் தாயார் பூங்கொடி கூறுகையில், தனது மகனின் வெற்றி தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இந்த சந்தோஷத்ததை கூற வார்த்தைகள் இல்லை எனக் கூறிய அவர், இது போன்று இன்னும் பல வெற்றிகளைத் பெற வாழ்த்து கூறினார் .