தருமபுரி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

263

தருமபுரி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் பிரசித்தி பெற்ற தட்சணகாசி கால பைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு மட்டுமன்றி கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து திரளான பக்தர்கள் வருகை தந்து, பூசணியில் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர்.
இதே போல் கரூரில் உள்ள கல்யாணபசுபதீஸ்வரர் கோவிலிலும் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பால், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்கள் அபிஷேகம் செய்து, பல வண்ண மலர்களால் செய்யப்பட்ட அலங்காரம் செய்ய காலபைரவருக்கு கும்ப தீபாராதனை , மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து திராளான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர் அருள் பெற்றனர்.