தருமபுரி, ஓமலூர், ஒசூர் உள்ளிட்ட 10 ரயில் நிலையங்களில் தென்மேற்கு ரயில்வே பொது மேலாளர் குப்தா ஆய்வு மேற்கொண்டார்.

258

கர்நாடக மாநிலம் ஹூப்ளியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தென்மேற்கு ரயில்வேயுடன், தருமபுரி, ஓமலூர், ஒசூர் ரயில் நிலையங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தென்மேற்கு மண்டல பொது மேலாளர் ஏ.கே.குப்தா, தருமபுரி, ஓமலூர், ஒசூர் உள்ளிட்ட 10 ரயில் நிலையங்களை பார்வையிட்டார். தருமபுரி ரயில் நிலையத்தின் அருகே கட்டப்பட்ட புதிய சமுதாயக் கூடத்தை குப்தா திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தருமபுரி, ஒசூர், ஓமலூர் ரயில் நிலையங்களை பிரித்து சேலம் கோட்டத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.