தருமபுரியில் நாளை நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நுற்றாண்டு விழாவையொட்டி பாதுகாப்பு பணியில் 4 ஆயிரம் போலீசார் குவிப்பு!

6258

தருமபுரியில் நாளை நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நுற்றாண்டு விழாவையொட்டி, பாதுகாப்பு பணியில் 4 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்
தமிழக அரசு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தருமபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நாளை நடைபெறவுள்ளது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.
ice_screenshot_20171006-190048இந்நிலையில், விழா மேடை அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அலங்கார வளைவுகள் , கட்சி கொடிகள் அமைக்கப்பட்டுள்ளதால் தர்மபுரி விழாக்கோலம் பூண்டுள்ளது. 8 மாவட்டங்களை சேர்ந்த 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.ice_screenshot_20171006-190205