மறைந்த ஜெயலலிதாவிற்கு தருமபுரி அருகே கிராம மக்கள் இறுதிச்சடங்கு செய்தனர்.

179

தருமபுரி மாவட்டம், செம்மன அள்ளி கிராமத்தில் அலங்கரிக்கப்பட்ட பாடையில் ஜெயலலிதாவின் உருவப்படத்தை வைத்து பெண்கள் ஒப்பாரி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, அவற்றை மயானம் வரை ஊர்வலமாக எடுத்துச்சென்று இறுதிச்சடங்குகள் முடித்தபின்னர், நல்லடக்கம் செய்தனர். இதில், செம்மன அள்ளி கிராமத்தை சேர்ந்த அதிமுகவினர் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனர்.