தருமபுரி மாவட்டத்தில் செண்டு மல்லிப் பூ அதிக விளைச்சலின் காரணமாக உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்

218

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் காடுசெட்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் செண்டு மல்லிப்பூ சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை காலங்களில் வியாபாரிகள் நல்ல விலை கொடுத்து பூக்களை கொள்முதல் செய்துவந்தனர். ஆனால் தற்போது தருமபுரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் செண்டு மல்லிப்பூ அதிக விளைச்சலின் காரணமாக பூவின் விலை குறைந்து காணப்படுகின்றது. இதனால் இதனை பயிரிட்ட விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர். மேலும் தற்போது கன்னியாகுமரி மற்றும் ஓசூர் வியாபாரிகள் மட்டுமே வந்து வாங்கி செல்வதால் நிறைய பூந்தோட்டங்களில் பூக்கள் அறுவடை செய்யப்படாமலேயே உள்ளது இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தங்களுக்கு உதவி செய்யவேண்டும் என பூ உற்பத்தியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்