18 எம்எல்ஏ-க்கள், மக்கள் செல்வாக்கு இருந்தால், பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலை சந்திக்க தயாரா?

361

தகுதி நீககம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏ-க்கள், மக்கள் செல்வாக்கு இருந்தால், பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலை சந்திக்க தயாரா? என அமைச்சர் தங்கமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

தர்மபுரி மாவட்டம் அரூரில் அதிமுக சார்பில் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அமைச்சர் தங்கமணி, முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன், எம்எல்ஏ முருகுமாறன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய வைகைச் செல்வன், ஆர்.கே.நகரில் தினகரனுக்கு கிடைத்த வெற்றி, இருபது ரூபாய் டோக்கனுக்கு கிடைத்த வெற்றி என்று கூறினார்.

டிடிவியிடம் 18 எம்எல்ஏ-க்களும் கொத்தடிமைகளாக இருப்பதாக கூறிய அவர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பிராய்லர் கோழி போன்றது எனவும், கொழுகொழுவென்று வளருமே தவிர, முட்டை போடாது என்று விமர்சித்தார். தினகரன் யார்? என்று கேள்வி எழுப்பிய வைகைச் செல்வன், அவர் ஒரு பெரா குற்றவாளி என்றும் தெரிவித்தார்.