பேருந்து எரிப்பு : தமிழக அரசின் பரிந்துரையின்படி, 3 பேரும் சட்டப்படியே விடுதலை என ஆளுனர் மாளிகை விளக்கம்..!

113

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 கைதிகளும் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக, ஆளுனர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக அரசின் பரிந்துரையின்படி, 3 பேரும் சட்டப்படியே விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டம் 161ஆவது பிரிவின் கீழ், 13 ஆண்டுகள் மூன்று பேரும் சிறையில் இருந்ததைக் கருத்தில் கொண்டு விடுதலை செய்யலாம் என தமிழக அரசு பரிந்துரைத்ததை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் ஆளுனர் மாளிகை கூறியுள்ளது.

கொலை செய்யும் நோக்கத்தோடு 3 பேரும் வன்முறையில் ஈடுபடவில்லை என்று தலைமைச் செயலரும், தலைமை வழக்குரைஞரும் ஆளுநர் மாளிகைக்கு விளக்கம் அளித்ததை ஏற்றுக் கொண்டே விடுதலை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது என்றும் விளக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.