தனுஷ்கோடியில் ரூ.8 கோடி மதிப்பில் புதிய மீன் இறங்குதளம்-முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்

276

தனுஷ்கோடியில் எட்டு கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மீன் இறங்குதளங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் 8 கோடி ரூபாய் மதிப்பிலும், டி.மாரியூரில் 4 கோடி ரூபாய் மதிப்பிலும் புதிய மீன் இறங்குதளங்கள் நிறுவப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதேபோன்று, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் மற்றும் திருவெறும்பூர் ஆகிய இடங்களில் ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சார் கருவூல அலுவலக கட்டடங்களையும் அவர் திறந்து வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் 55 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சார் பதிவாளர் கட்டடத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், ராஜேந்திரபாலாஜி, மணிகண்டன், பாலகிருஷ்ணா ரெட்டி மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.