நடிகர் தனுஷ் மீது மேலூர் தம்பதி புகார் : நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் போலி ஆவணங்களை தாக்கல் செய்ததாக குற்றச்சாட்டு…!

357

வழக்கு விசாரணையின்போது போலியான ஆவணங்களை நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் தாக்கல் செய்ததாக மேலூர் தம்பதியினர் போலீஸில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியினர் நடிகர் தனுஷ் தங்களது மகன் என்று கோரி வழக்கு தொடர்ந்தனர். மேலும் பல்வேறு ஆதாரங்களை கதிரேசன் தம்பதியினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். திரைவுலகில் பெரும்பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இந்நிலையில், தனுஷ் நீதிமன்றத்தில் சமர்பித்த ஆவணங்கள் போலியானவை என்று கதிரேசன் மதுரை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனுவை அளித்தார். இதனால் திரைவுலகில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.