பொது மக்களின் உயிரை காப்பாற்றவே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது – டிஜிபி. ராஜேந்திரன்

239

பொதுமக்களின் உயிரை காப்பாற்றவே தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ள டிஜிபி. ராஜேந்திரன், கலவரத்தில் 72 போலீசார் காயமடைந்தாக குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடி கலவரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், பொது மக்களின் உயிரை காப்பாற்றவே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.
கலவரத்தின் போது 15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சேதப்படுத்தப்படுத்தப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டுள்ள ராஜேந்திரன், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக 185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 177 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், வன்முறையை தூண்டியதாக 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
தூத்துக்குடி கலவரத்தின் போது போலீசார் 72 பேர் காயம் அடைந்ததாக டிஜிபி. ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.