தமிழகத்தில் உள்ள அனைத்து சிறப்பு காவல்படையினர் தயார் நிலையில் இருக்க டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

2000

தமிழகத்தில் உள்ள அனைத்து சிறப்பு காவல்படையினர் தயார் நிலையில் இருக்க டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட எஸ்.பிக்கள் இன்றும் நாளையும், தயாராக இருக்குமாறு ஆணையிட்டுள்ளார். மேலும் சென்னை உள்பட 21 இடங்களில் அசாதாரண சூழலை சந்திக்க சிறப்பு காவல்படையினர் தயாராக இருக்குமாறும் விடுப்பில் சென்றுள்ள காவலர்கள் உடனடியாக முகாம்களுக்கு திரும்புமாறும் டி.ஜி.பி.டி.கே.ராஜேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார். அசாதாரண சூழல் வரும் போது, இது போன்ற உத்தரவு பிறப்பிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.