முதல்வருடன் டிஜிபி ராஜேந்திரன் திடீர் சந்திப்பு..!

122

குட்கா விவகாரத்தில் சிபிஐ சோதனை நடைபெற்றுள்ள நிலையில், டிஜிபி டி.கே. ராஜேந்திரன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ளார்.

குட்கா விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே. ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் ஆகியோர் வீடுகள் உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனை தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சோதனை முடிந்த சில மணி நேரங்களில் டி.கே ராஜேந்திரன் கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார். குட்கா விவகாரம் தொடர்பான சிபிஐ சோதனைக்குப் பிறகு டிஜிபி மாற்றப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில் இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.