பொதுமக்கள் பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாட போலீசார் சிறப்பாக பணியாற்ற வேண்டும் – டிஜிபி டி.கே. ராஜேந்திரன்

80

பொதுமக்கள் பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாட போலீசார் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என தமிழக டிஜிபி டி கே ராஜேந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை அருகே ஆவடியில் தமிழ்நாடு சிறப்புக் காவலர்கள் சார்பில் பொங்கல் திருவிழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் டி.கே . ராஜேந்திரன், பொங்கல் பானையில் அரிசியிட்டு விழாவைத் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் வடிவமைக்கப்பட்டிருந்த மாதிரி கிராமமும் அதில் வைக்கப்பட்டிருந்த உழவுப் பொருட்களும் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தன. நிகழ்ச்சியில் பேசிய டிஜிபி ராஜேந்திரன், காவலர்களிடம் காணப்படும் மன அழுத்தத்தை போக்க அரசு ஏற்பாட்டில் பிரபல மனநல ஆராய்ச்சி மையத்தின்மூலம் சிறப்புப் பயிற்சி வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இதன்மூலம் பல்வேறு பிரச்னைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். போலீசார் பொங்கல் விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடியதைப் போல் பொதுமக்களும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும். அதற்கு போலீசார் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று டிஜிபி ராஜேந்திரன் அறிவுறுத்தினார்.