நடிகர் மற்றும் நடன இயக்குநரான பிரபுதேவா 12 வருடங்களுக்கு பிறகு நடித்து வெளியாகியுள்ள தேவி படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

447

நடிகர் மற்றும் நடன இயக்குநரான பிரபுதேவா 12 வருடங்களுக்கு பிறகு நடித்து வெளியாகியுள்ள தேவி படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவா, நீண்ட இடைவேளைக்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் தேவி. இப்படம் கடந்த 7 ஆம் தேதி வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், படத்திற்கான வெற்றியை கொண்டாடும் வகையில், சென்னை பிரசாத் லேப்பில், படக்குழுவினர் சார்பில் சக்சஸ் மீட் நடைபெற்றது. இதில் பேசிய, நடிகர் பிரபுதேவா, இப்படத்தை வெற்றிப்படமாக மாற்றிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில், படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜய், ஆர்.ஜே.பாலாஜி, தயாரிப்பாளர் அஸ்வின் கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்