தேவகோட்டை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று நபர்கள் கைது…

251

தேவகோட்டை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நிதி நிறுவன ஊழியர் அஜீத்கானை சில மர்மநபர்கள் வழிமறித்துள்ளனர். பின்னர் அவரிடம் இருந்த ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர். மேலும் அஜீத்கானின் மோட்டார் சைக்கிள், செல்போன் ஆகியவற்றையும் கொள்ளையர்கள் எடுத்து சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது செல்வராஜ், திருச்செல்வம், சங்கர் ஆகியோரை மடக்கி விசாரித்ததில், அஜீத்கானிடம் வழிப்பறி செய்ததை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து மூவரையும் கைது செய்த காவல் துறையினர், கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.