உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி என தேவே கவுடா அறிவிப்பு..!

492

கர்நாடகா உள்ளாட்சி தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தனித்து போட்டியிடும் என்ற தேவே கவுடாவின் அறிவிப்பால் காங்கிரஸ் அதிர்ச்சியடைந்துள்ளது.

கர்நாடக மாநிலம், பெங்களூரில் பேசிய மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவே கவுடா, உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்தால் இரு கட்சி தொண்டர்களிடமும் குழப்பம் ஏற்படும் என கூறினார். எனவே உள்ளாட்சி தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தனித்து போட்டியிடும் என்று கூறிய தேவே கவுடா, இதனால் காங்கிரஸ் கூட்டணியில் பிளவு எதுவும் ஏற்படாது என்றும், ஆட்சி செய்வதில் இரு கட்சிகளின் கூட்டணி நீடிக்கும், அதில் எந்தவித குழப்பமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.