சென்னை உயர்நீதிமன்றத்தில் கொடியேற்று விழா : தலைமை நீதிபதி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்

237

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தலைமை நீதிபதி தஹில ரமானி தேசியக் கொடியை ஏற்றி வைததார்.

நாட்டின் 72-வது சுதந்திர தின விழா சென்னை உயர்நீதிமன்றத்தில் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதில் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள தஹில ரமானி முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றி வவைத்தார். தொடர்ந்து பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதேபோன்று சென்னை விமான நிலையத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், விமான நிலைய இயக்குனர் சந்தரமவுலி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். தொடர்ந்து, பாதுகாப்புத்துறை, தீயணைப்புத்தறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதேபோன்று, சென்னை ராஜாஜி சாலையில் உள்ள துறைமுக பொறுப்புக் கழகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பொறுப்புக் கழகத் தலைவர் ரவீந்திரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து, துறைமுக தீயணைப்பு படை, தேசிய மாணவர் படை, பள்ளி மாணவர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆகியோரின் அணிவிகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். சென்னை ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில் சுங்கத்துறை ஆணையர் அஜித்குமார் மற்றும் சுங்க ஆணையர் ராஜன் ஷொத்ரி ஆகியோர் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர். பேண்டு வாசித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதேபோன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறை முதன்மை ஆணையர் சுஷில்குமார் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.