பல் மருத்துவ படிப்புக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு தொடக்கம்..!

275

பல் மருத்துவ படிப்புக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு, சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் தொடங்கியது.

தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள BDS படிப்புக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வில், அரசு ஒதுக்கீட்டில் 264 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 569 இடங்களும் நிரப்பப்படாமல் இருந்தன. இந்த நிலையில் பல் மருத்துவ படிப்புக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது. இதன்படி விண்ணப்பித்த 207 பேர் அழைக்கப்பட்டனர்.

இவர்களுக்கான கலந்தாய்வு இன்று காலை 10 மணிக்கு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கலந்தாய்வு தொடங்கியது. இந்த கலந்தாய்வில் பல் மருத்துவ இடங்களுக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களும், ஏற்கனவே விண்ணப்பித்து கலந்தாய்வில் கலந்து கொள்ளாதவர்களும் பங்கேற்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.