டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தும் விவகாரம் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டது- விஜயகாந்த்!

235

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு மெத்தனமாக செயல்படுவதாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களை தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினார். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடுகள் மிக மோசமாக உள்ளதாக குற்றம் சாட்டிய விஜயகாந்த், சுகாதார பணிகளை விரைந்து மேற்கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தமிழகத்தில் மத்திய குழுவினர் தாமதாக வந்து ஆய்வு செய்துள்ளதாக புகார் தெரிவித்த் விஜயகாந்த், டெங்குவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா பத்து லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவேண்டும் என்றும் தெரிவித்தார். உள்ளாட்சித்தேர்தலை தள்ளி போடுவதும் டெங்கு காய்ச்சலுக்கு ஒரு காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.