டெங்கு குறித்து பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை : வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

252

டெங்கு குறித்து பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெங்கு இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க அரசு இயந்திரம் முழுமையாக செயல்பட்டு வருவதாக கூறினார். அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவுக்கு டெங்கு சிகிச்சைக்கான மருந்துகள் இருப்பதாக கூறிய அவர், தேவை இல்லாமல் மக்கள் அச்சம் அடைய தேவையில்லை என்று தெரிவித்தார். டெங்குவிற்கும், உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்பு இல்லை என்று கூறிய அமைச்சர் உதயகுமார், தேவையற்ற பேட்டிகள் கொடுத்து மக்களை குழப்புவதைக்காட்டிலும், ஸ்டாலின் டெங்கு கொசு ஒழிப்பில் ஈடுபட்டால் மக்களுக்கு நன்மை ஏற்படும் என்றும் தெரிவித்தார்.