டெங்குக்கு 23 பேர் தான் பலியானதாக கூறுவது வேதனை அளிக்கிறது : ஜி.ராமகிருஷ்ணன்.

253

டெங்கு காய்ச்சலுக்கு ஏராளமானோர் உயிரிழந்த நிலையில், 23 பேர் தான் இறந்ததாக கூறுவது வேதனை அளிப்பதாக இந்தியா கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக விவசாயிகளை பாதுகாக்க மத்திய அரசு தவறி விட்டதாக குற்றம்சாட்டினார். மோடி ஆட்சியில் இந்திய பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் ஜி.ராமகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார். தமிழகத்தில், டெங்கு காய்ச்சலுக்கு நாள்தோறும் ஏராளமான மக்கள் பாதிக்கப்படுவதாகவும், பலர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.