டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் அளவிற்கு சுகாதாரமற்ற நிலையில் வைத்திருக்கும் தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை!

313

டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் அளவிற்கு சுகாதாரமற்ற நிலையில் வைத்திருக்கும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என, பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் அளவிற்கு சுகாதாரமற்ற நிலையில் வைத்திருக்கும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
டெங்குவின் பாதிப்பு தமிழகத்தில் தீவிரமாக உள்ளது என தெரிவித்துள்ள அவர், அதனைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் தூய்மைப் பணிகளும் கொசு ஒழிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,
கொசு உற்பத்தியாகும் அளவுக்கு சுற்றுப்புறத்தை சுகாதாரமற்ற முறையில் வைத்திருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் அதிகநேரம் செலவிடும் பள்ளி வளாகங்களை தூய்மையாக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள குழந்தைசாமி,
கொசுக்களை உற்பத்தி செய்யும் வகையில் வளாகங்களை தூய்மையற்ற முறையில் வைத்திருக்கும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளி வளாகங்கள் தூய்மையாக இல்லை என தெரிந்தால், 104 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு பெற்றோர் புகார் அளிக்கலாம் எனவும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.