டெங்கு காய்ச்சல் 15 நாட்களில் முழுமையாக கட்டுப்படுத்தப்படும்-சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி!

286

டெங்கு காய்ச்சல் 15 நாட்களில் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் என்று, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி அளித்துள்ளார்.
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அவர் ஆய்வு மேற்கொண்டார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்த அவர், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை பற்றி கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் விஜய பாஸ்கர், டெங்கு காய்ச்சல் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதாக கூறினார். 15 நாட்களுக்குள் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.