டெல்லியில் 90க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

283

டெல்லியில் 90க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
டெல்லியில் டெங்கு காய்ச்சல் காரணமாக மக்கள் அதிகஅளவில் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். கடந்த வாரத்தில் மட்டும் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 40 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது வரை 90 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலில் மக்களை பாதுகாக்கும் வகையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக மருத்துவமனையில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. டெங்கு நோயிலிருந்து காத்துக்கொள்ள வீட்டின் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.