தவறான புரிந்துணர்வை ஏற்படுத்தும் கருத்துக்கள் அகற்றப்பட வேண்டுமென்றால் அதற்கும் தயார்!-தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம்!

178

மெர்சல் படத்தில் தவறான புரிந்துணர்வை ஏற்படுத்தும் கருத்துகளை தேவைப்பட்டால் அகற்றத் தயார் என திரைப்படத்தை தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
இதுதொடர்பாக, தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மட்டுமன்றி, உலகமெங்கும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மெர்சல் திரைப்படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெர்சல் திரைப்படம் யாருக்கும் எதிரானது அல்ல என்றும், அரசுக்கு எதிரான கருத்துக்களை சொல்லும் படமும் அல்ல என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
திரைப்படம் வெளியான சில தினங்களில் மீண்டும் சர்ச்சைகளுக்கு உள்ளானது தங்களை மிகுந்த மன வேதனை அடைய செய்துள்ளதாக தேனாண்டாள் பிலிம்ஸ் தெரிவித்துள்ளது.
பாஜக தலைவர்கள் பார்வையில் அவர்கள் எதிர்ப்பு நியாயமாகவே உள்ளதாக கூறியுள்ள தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம்,
தவறான புரிந்துணர்வை ஏற்படுத்தம் கருத்துக்கள் அகற்றப்பட வேண்டுமென்றால் அதற்கும் தயாராகவே இருப்பதாக தெரிவித்துள்ளது.