ரூ.4,900 கோடி கருப்புப்பணம் டெபாசிட் செய்துள்ளதாக 21 ஆயிரம் பேர் தகவல்.

333

மத்திய அரசின் பிரதான் மந்திரி கரிப் கல்யான் யோஜ்னா திட்டத்தின் கீழ் 4 ஆயிரத்து 900 கோடி ரூபாய் கருப்புப் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்துள்ளதாக 21 ஆயிரம் பேர் தகவல் அளித்துள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி முதல் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசு, கருப்புப்பணத்தை வெளிக்கொண்டு வரும் அடுத்தகட்ட நடவடிக்கையாக, பிரதான் மந்திரி கரிப் கல்யான் யோஜ்னா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் தங்களிடம் இருக்கும் கருப்புப் பணத்தை வங்கியில் செலுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்றும், 50 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு, 25 சதவீதம் வட்டியில்லாத டெபாசிட் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி மார்ச் 31-ந் தேதி வரை 4 ஆயிரத்து 900 கோடி ரூபாய் கருப்புப் பணத்தை 21 ஆயிரம் பேர் வங்கியில் செலுத்தி உள்ளதாக வருமான வரித்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில், 2 ஆயிரத்து 451 கோடி ரூபாய் வரியாக வசூலிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.