டெல்டா மாவட்டங்களுக்கு காவிரி நீர் வழங்காத அரசுகளுக்கு கண்டனம்..!

110

டெல்டா மாவட்டங்களுக்கு காவிரி நீர் வழங்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, பெண்கள் ஒப்பாரி வைத்தும், கும்மியடித்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேட்டூர் அணையில் இருந்து வழங்கம்போல் தண்ணீர் திறக்கப்படாததால், நாகையில் இரண்டரை லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் குறுவை சாகுபடியை தொடங்க முடியாமல் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்தநிலையில், தண்ணீர் திறக்க முடியாமல் அலட்சியமாக செயல்படும் தமிழக அரசை கண்டித்து நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த மடப்புரத்தில் உடைந்த கதவணைக்கு மெழுகுவர்த்தி ஏந்தி விவசாயிகள் அஞ்சலி செலுத்தினர். அப்போது, கர்நாடக அரசிடம் பேசி உரிய நீரை பெற்றுத்தர வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். மேலும், துக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒப்பாரி வைத்தும், கும்மியடித்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி நீர் வழங்காமல் தொடர்ந்து தமிழகம் வஞ்சிக்கப்படுவதாகவும், ஆணையத்தின் தீர்ப்பை மதிக்காத கர்நாடகா அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.