உலகின் 2 ஆம் நிலை டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சுக்கு முன்னாள் அமெரிக்க வீரர் ஆன்ட்ரே அகஸ்ஸி பயிற்சியளிக்கிறார்.

249

உலகின் 2 ஆம் நிலை டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சுக்கு முன்னாள் அமெரிக்க வீரர் ஆன்ட்ரே அகஸ்ஸி பயிற்சியளிக்கிறார்.
இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்ற ரோம் மாஸ்டர்ஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் ஜெர்மெனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவிடம் ஜோகோவிச் தோற்றார். இது தொடர்பாக செய்யதியாளர்களிடம் பேசிய ஜோகோவிச், தான் மதிக்கக்கூடியவர்களில் அகஸ்ஸியும் ஒருவர் என்று கூறினார். தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், டென்னிஸ் வாழ்க்கையிலும் பங்களிப்பு செய்யக்கூடியவர் அகஸ்ஸி என்று குறிப்பிட்ட ஜோகோவிச், பிரெஞ்சு ஓபனின்போது பயிற்சியளிக்க அகஸ்ஸி ஒப்புக்கொண்டுள்ளார் என்றும் தெரிவித்தார். 8 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான அகஸ்ஸி 2006ல் சர்வதேச டென்னிசிலிருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கத